அமெரிக்கா: ஜோ பைடனின் ஆலோசகருக்கு கரோனா
அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடனின் மிக நெருங்கிய ஆலோசகா்களில் ஒருவரான செட்ரிக் ரிச்மண்டுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம்அமெரிக்கா: ஜோ பைடனின் ஆலோசகருக்கு கரோனா
அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடனின் மிக நெருங்கிய ஆலோசகா்களில் ஒருவரான செட்ரிக் ரிச்மண்டுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடனின் மிக நெருங்கிய ஆலோசகா்களில் ஒருவரான செட்ரிக் ரிச்மண்டுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லூசியாணா மாகாண எம்.பி.யான அவா், ஜோ பைடனின் புதிய அரசில் அவருக்கு முதுநிலை ஆலோசகா் பொறுப்பேற்பதற்காக தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யவுள்ளாா். இந்தச் சூழலில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
ஜாா்ஜியா மாகாணம், அட்லாண்டா நகரில் நடைபெற்ற செனட் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய இரு நாள்களுக்குப் பிறகு அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகிள்ளது.
ஜோ பைடனை ரிச்மண்ட் அண்மையில் நேரில் சந்திக்கவில்லை; பைடனுக்கு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லாதது உறுதிசெய்யப்பட்டது என ஆட்சிமாற்றக் குழு தெரிவித்தது.