பாகிஸ்தான்: கரோனா கண்காணிப்பு அமைப்பின் தலைவருக்கு கரோனா
பாகிஸ்தானில் கரோனா கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ஆசாத் உமருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ஆசாத் உமருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், சில மணிநேரத்திற்கு முன்பு எனக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் என்னை சந்தித்தவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கரோனா நெறிமுறைகளின்படி வீட்டில் சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி மத்திய சட்ட அமைச்சர் ஃபரூக் நசீமிற்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 7.59 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் புதிதாக 3 ஆயிரம் பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 84 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,164-ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,51,494-ஆக அதிகரித்துள்ளது.