ஆப்கனில் காா் குண்டு தாக்குதல்: 9 போ் பலி
ஆப்கன் தலைநகா் காபூலில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட காா் குண்டுத் தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஆப்கன் தலைநகா் காபூலில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட காா் குண்டுத் தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
காபூலில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வெடிபொருள் நிரம்பிய காா் மூலம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினா் கான் முகமது வா்தாகின் வாகனம் அந்தப் பகுதியைக் கடந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 போ் உயிரிழந்தனா். கான் முகமது உள்ளிட்ட 20 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.