அன்டார்டிகாவையும் விட்டு வைக்காத கரோனா
கரோனா இதுவரை எட்டிப்பார்க்காத கடைசி கண்டமாக இருந்த அன்டார்டிகாவிலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா இதுவரை எட்டிப்பார்க்காத கடைசி கண்டமாக இருந்த அன்டார்டிகாவிலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அன்டார்டிகாவில் இரண்டு ராணுவ முகாமில் உள்ள 58 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சிலி ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை ஜென் பெர்நார்டோ ஓ'ஹிக்கின்ஸ் ரிகுவெல்ம் அன்டார்டிகா முகாமில் 36 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டாக சிலி ராணுவம் அறிவித்துள்ளது.
சிலியின் பையோபியோ மாகாணா சுகாதார அமைச்சர் கூறுகையில், சிலியன் கப்பற்படையின் செர்ஜென்ட் அல்டியா கப்பலில் இருக்கும் 21 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
கரோனா பாதித்த 36 பேரில் 26 பேர் ராணுவ வீரர்கள், 10 பேர் ஒப்பந்த ஊழியர்களாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் என்றும், இதுவரை யாருக்கும் எந்த உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் செர்ஜியன்ட் அல்டியா கப்பலில் இருந்த 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த கப்பலில் இருந்த 208 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.