உலகம்

இங்கிலாந்தில் ஒருநாள் கரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு

IANS

பிரிட்டனில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து இன்று தினசரி பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 

இங்கிலாந்தில் புதன்கிழமை நிலவரப்படி 744 இறப்புகள் பதிவாகியுள்ளன.  இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 69,157 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் 39,237 பேருக்கு புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது நாட்டில் தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து, தினசரி பாதிப்பு இன்று அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதையடுத்து, இங்கிலாந்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 2,15,5,996 ஆக உயர்ந்துள்ளது. 

இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துள்ளது. மேலும், மக்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் இரண்டு பயணிகளுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் அறிவித்துள்ளார். 

புதிய வகை கரோனா அதிகளவில் பரவக்கூடியதாக உள்ளது. இதன் விளைவாக, பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கு நான்கு அடுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT