முகப்பு
உலகம்

கரோனா அச்சுறுத்தல்: தென்னாப்பிரிக்க விமானங்களுக்கு ஹாங்காங் தடை

புதிய வகை கரோனா பரவலின் அச்சுறுத்தல் காரணமாக தென்னாப்பிரிக்க விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
கரோனா அச்சுறுத்தல்: தென்னாப்பிரிக்க விமானங்களுக்கு ஹாங்காங் தடை
பகிர்:

புதிய வகை கரோனா பரவலின் அச்சுறுத்தல் காரணமாக தென்னாப்பிரிக்க விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தீநுண்மியின் புதிய ரகமொன்று அண்மையில் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. அந்தப் புதிய ரகத் தீநுண்மி, முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்தன. அதேபோல் தென்னாப்பிரிக்காவிலும் புதிய வகை கரோனா தொற்று பரவி வருவதாகக் கண்டறியப்பட்ட நிலையில் அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்து வருகின்றன.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க விமானங்களுக்கு தற்காலிகத் தடை விதித்து ஹாங்காங் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கடந்த திங்கள்கிழமை முதல் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →