முகப்பு
கோப்புப்படம்
உலகம்

ரஷியாவில் கரோனா பலி 55 ஆயிரத்தைக் கடந்தது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,787 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 487 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம்

ரஷியாவில் கரோனா பலி 55 ஆயிரத்தைக் கடந்தது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,787 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 487 பேர் உயிரிழந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
கோப்புப்படம்
பகிர்:

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,787 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 487 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாட்டில் புதிதாக 27,787 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 30,78,035 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 28,284 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 6,253 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 487 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 55,265 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போதுவரை 24,71,309 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 5,51,461 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலகளவில் கரோனா பாதிப்பில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →