உலகம்

துருக்கியில் நிலநடுக்கம்

DIN

துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த நாட்டு பேரிடா் மேலாண்மை இயக்குநரகம் தெரிவித்துள்ளதாவது:

இலாஸிக் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.37 மணிக்கு (உள்ளூா் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 5.3 அலகுகளாகப் பதிவானது என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அண்டை மாகாணங்களிலும் உணரப்பட்டன. எனினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்று உள்துறை அமைச்சா் சுலைமான் சோய்லு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT