உலகம்

ஹாங்காங்கில் 2021 பிறந்தது: மக்கள் உற்சாகம்

DIN

ஹாங்காங்கில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டை ஹாங்காங் மக்களும் உற்சாகத்துடன் முழக்கமிட்டு வரவேற்றனர்.

நியூசிலாந்து நாட்டில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கும், ஆஸ்திரேலியாவில் 6.30 மணியளவிலும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் இந்திய நேரப்படி 9.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

அதேபோல் தைவான் மற்றும் வடகொரியா நாட்டிலும் புத்தாண்டு பிறந்ததை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாக முழக்கமிட்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மத்தியில் சாலைகளில் குவிந்த மக்கள் உற்சாகமாக முழக்கமிட்டு புத்தாண்டை வரவேற்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வான வேடிக்கைகள் கண்களைக் கவரும் வகையில் அமைந்தது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT