சிரியாவில் பேருந்து மீது திடீர் தாக்குதல்: 25 பேர் பலி
கிழக்கு சிரியாவில் பேருந்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:45 PM
கிழக்கு சிரியாவில் பேருந்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் கபாஜெப் பகுதியில் உள்ள பால்மைரா-டெய்ர் அல்-ஜோர் சாலையில் பேருந்தைக் குறிவைத்து, தாக்கியதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்ட நிலையில், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
Advertisement
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) பயங்கரவாத அமைப்புடன் இந்த தாக்குதலை தொடர்புப்படுத்தியுள்ளது.