சிரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 25 பேர் பலி
சிரியாவில் 3 பேருந்துகள் மீது பயங்கரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
சிரியாவில் 3 பேருந்துகள் மீது பயங்கரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
ஈராக்கின் எல்லையான சிரியாவின் கிழக்கு டெய்ர் அஸ் சோர் மாகாணத்தில் உள்ள பிரதான சாலையில் சிரியப் படைவீரர்களை அழைத்துச் சென்ற பேருந்துகள் மீது புதன்கிழமை பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் 25 பேர் கொல்லப்பட்டனர். வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது ஐ.எஸ். பயங்கரவாதக் குழு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Advertisement
சிரியாவின் முக்கிய பகுதிகளை இழந்த பின்னர், ஐ.எஸ் தீவிரவாதிகள் கிழக்கு சிரியாவில் உள்ள பாலைவன பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். எனினும் அவர்கள் அவ்வப்போது ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவத் தளங்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.