முகப்பு
உலகம்

இஸ்தான்புல் ஓடுபாதையில் விமானம் விழுந்து உடைந்தது: 3 பேர் பலி; 179 பேர் காயம்

இஸ்தான்புல் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட போது மோசமான வானிலை காரணமாக விமானம் கீழே விழுந்து, தீப்பிடித்து, மூன்று துண்டுகளாக உடைந்ததில் 3 பேர் பலியாகினர். 179 பேர் காயமடைந்தனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2020 at 2:55 PM
பகிர்:


இஸ்தான்புல்: : துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட போது மோசமான வானிலை காரணமாக விமானம் கீழே விழுந்து, தீப்பிடித்து, மூன்று துண்டுகளாக உடைந்ததில் 3 பேர் பலியாகினர். 179 பேர் காயமடைந்தனர்.

உடைந்து விழுந்த விமானத்தின் ஓட்டைகள் வழியாக, அதில் பயணம் செய்த பயணிகள் வெளியே குதித்து ஓடி வரும் சில புகைப்படங்கள் துருக்கி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

போயிங் 737 ரக விமானம், இஸ்தான்புல்லில் இருந்து இஸ்மிர் பகுதிக்கு நேற்று புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Advertisement

கடும் சூறாவளிக் காற்று மற்றும் மழை காரணமாக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 179 பேர் காயமடைந்தனர் என்று துருக்கி சுகாதாரத் துறை அமைச்சர் ஃபஹ்ரேட்டின் தெரிவித்துள்ளார்.

ஓடுதளத்தில் இருந்து பறந்து சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விமானம் கீழே விழுந்துள்ளது. இதில் விமானம் பல துண்டுகளாக உடைந்துச் சிதறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.