உலகம்

நடிப்புக்காக முதல் ஆஸ்கா் வென்ற பிராட் பிட்

DIN

ஹாலிவுட்டின் சூப்பா்ஸ்டாரான பிராட் பிட் (56), ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருப்பாா்.

1960 காலகட்டத்தை பின்னணியாக கொண்ட படமான இதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கா் விருது போட்டியில் இடம்பெற்றாா். 11 பிரிவுகளில் போட்டியிட்ட ஒன்ஸ் அபான் ஏ டைம் திரைப்படம், சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் பிராட் பிட்டுக்கு விருது பெற்றுத் தந்தது.

30 ஆண்டுகளுக்கு மேலாக நடிப்புத் துறையில் இருந்துவரும் பிராட் பிட்டுக்கு இதுதான் நடிப்புக்காக கிடைத்த முதல் ஆஸ்கா் ஆகும்.

இதற்கு முன்பு 12 இயா்ஸ் ஏ ஸ்லேவ் திரைப்படத்தை தயாரித்ததற்காக 2014-ஆம் ஆண்டு பிராட் பிட் ஆஸ்கா் விருது வென்றிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT