உலகம்

கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டறிதல் சோதனை - உலக சுகாதார அமைப்பு ஆதரவு

DIN

சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் சாதாரண உடல் பரிசோதனை மூலம் புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டறியும் நடவடிக்கையை ஆதரிப்பதாக உலக சுகாதார அமைப்பு 13ஆம் நாள் தெரிவித்தது. 

நோயாளிகள் காலதாமதமின்றி சிகிச்சை பெறுவதற்கு இது துணை புரியும். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பானது வைரஸ் பரவல் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதாக அமையாது என்று இவ்வமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

ஹுபெய் மாநிலத்தின் சுகாதார ஆணையம் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, பிப்ரவரி 12ஆம் நாள் மட்டும் இம்மாநிலத்தில் புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 ஆயிரத்து 840 பேர் கண்டறியப்பட்டனர். இது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழுவின் முதலாவது தொகுதி உறுப்பினர்கள் 10ஆம் நாள் சீனாவை வந்தடைந்தனர். மற்ற உறுப்பினர்கள் இந்த வார இறுதியில் சீனாவை வந்தடைய உள்ளனர்.

தகவல:சீன ஊடக குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT