உலகம்

அமெரிக்கா இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 4 பேருக்கு பலத்த காயம்

DIN

அமெரிக்காவின் கனெக்டிகட் எனுமிடத்தில் அமைந்துள்ள ஹார்ட்ஃபோர்டில் உள்ள ஒரு இரவு விடுதியில் மர்ம நபர் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

சௌத் எண்ட் இரவு விடுதியில் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் தகவலின் அடிப்படையில், 5 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 28 வயது மதிக்கத்தக்க ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

காயமடைந்த நான்கு பேரில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. மேலும் இருவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT