உலகம்

வைரஸ் பரவலைத் தடுக்கும் சீனாவுக்காக இந்திய பொது மக்கள் இறை வழிபாடு

DIN


இந்திய பொது மக்கள் பலர், மும்பையிலுள்ள மிக புகழ் பெற்ற இந்திய வாயிலின் அருகில் கடந்த 20ம் தேதி இரவு, ஒன்று கூடி, வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் உள்ள சீனாவுக்காக இறை வழிபாடு செய்தனர்.

இதில் கலந்துகொண்ட மும்பை நகரவாசி ப்ரிடாம் ஷர்மா பேசுகையில்,

புதிய ரக கரோனா வைரஸ் பரவலில் சிக்கிக் கொண்டுள்ள சீனாவுக்கு இந்திய மக்கள் சார்பில் ஆறுதல் தெரிவிக்கின்றோம். நாங்கள் சீனாவுக்காக இறை வழிபாடு செய்கின்றோம் என்றார்.

இந்நடவடிக்கையில் கலந்துகொண்ட இந்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இரண்டாவது உலகப் போர் காலத்தில் இந்திய மருத்துவர் கவார்கனாத் எஸ் கோத்னிஸ் சீனாவுக்கு வந்து, மருத்துவ உதவி அளித்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

புதிய ரக கரோனா வைரஸ் பரவல், சீனாவுக்கும் உலகிற்கும் அறைகூவல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் சீனாவும் மருத்துவர் கோத்னிஸின் எழுச்சியை வெளிக்கொணர்ந்து, இன்னல்களைச் சமாளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT