முகப்பு
உலகம்

கரோனா வைரஸுக்கு இத்தாலியில் முதல் பலி 

கரோனா வைரஸ் இத்தாலியில் பரவி வருவதையடுத்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Updated On : 22 பிப்ரவரி, 2020 at 1:11 PM
பகிர்:

ரோம்: கரோனா வைரஸ் இத்தாலியில் பரவி வருவதையடுத்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு சீனாவில் இதுவரை 2360-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்று, பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், இத்தாலியில் வடக்கு மாகாணமான படுவா பகுதியில் 78 வயதுள்ள முதியவர் ஒருவர் கரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளார். 

இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவ துவங்கியுள்ளது. இத்தாலியில் 14 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், 17 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

Advertisement

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இத்தாலியில் முதல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.