உலகம்

அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவின் படி இராக் மீது தாக்குதல்: அமெரிக்க பாதுகாப்புத்துறை

DIN

அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டதன் படி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,

இராக்கில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் உயர்மட்டத் தளபதி காசிம் சுலைமாணி தொடர்ந்து திட்டம் வகுத்து வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் உயிரிழப்புக்கு ஈரான் உயர்மட்டத் தளபதி காசிம் சுலைமாணியும் அவரது கட்ஸ் படையும் தான் முக்கியக் காரணம்.

எனவே அதிபர் டொனால்டு டிரம்பின் வழிகாட்டுதலின் படி, இராக்கில் உள்ள அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் விதமான தற்காப்பு நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பான புரட்சிகர காட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமாணி கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காசிம் சுலைமாணி கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சுட்டுரைப் பக்கத்தில் அமெரிக்க தேசியக் கோடியைப் பதிவிட்டிருந்தார். இருப்பினும் அதில் வேறு விளக்கங்கள் அளிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT