முகப்பு
உலகம்

விமானம் புறப்பட்ட போது கழன்று விழுந்த டயர்: அச்சத்தில் உறைய வைக்கும் விடியோ

பொதுவாக அனைவருக்கும் கனவாக இருப்பது விமானப் பயணம்தான். ஆனால், விமான விபத்து குறித்து எப்போது செய்தி கேட்டாலும் அதிர்ச்சிக்குள்ளாவதும் உண்மைதான். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:24 PM
பகிர்:


புது தில்லி: பொதுவாக அனைவருக்கும் கனவாக இருப்பது விமானப் பயணம்தான். ஆனால், விமான விபத்து குறித்து எப்போது செய்தி கேட்டாலும் அதிர்ச்சிக்குள்ளாவதும் உண்மைதான்.

அந்த வகையில் நம்மை அச்சத்தில் உறைய வைப்பதாகவே இந்த செய்தியும், விடியோவும் அமைந்துள்ளது.

ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று புறப்பட்ட போது, அதன் டயர் ஒன்று தீப்பிடித்து எரிந்து கழன்று விழுந்தது. உடனடியாக விமானி, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

இந்த சம்பவம் முழுவதையும், விமானத்தில் இருந்த ஒரு பயணி தனது செல்போனில் விடியோ பதிவு செய்துள்ளார். அதுதான் இன்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

அந்த விடியோவை பதிவிட்டிருக்கும் அவர், "நான் தற்போது இந்த விமானத்தில்தான் இருக்கிறேன். விமானத்தின் டயர் கழன்றுவிட்டது. 2020 தொடக்கமே சிறப்பாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த விடியோவில், விமானம் புறப்பட்டதும், ஒரு டயர் தீப்பிடித்து எரிகிறது. பிறகு வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்த டயர் கழன்று விழுகிறது.

இந்த விடியோவைப் பார்க்கும் ஒவ்வொரும், அடடா என்று அலறுவதைத் தவிர்க்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.