உலகம்

மாங்காய் சாப்பிட ஆசைப்பட்டு 5 அடி சுவரை ஏறிக் குதித்த யானை

DIN

ஸாம்பியாவின் தெற்கு லங்வா தேசியப் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் யானை ஒன்று மாந்தோப்புக்குச் செல்ல 5 அடி உயரமுள்ள சுற்றுச் சுவரை ஏறிக் குதித்துச் சென்ற காட்சிகள் சமூக தளங்களில் பரவி வருகிறது. 

உடல் எடை மற்றும் உருவத்தால் நடப்பதற்கே சிரமப்படும் யானை ஒன்று, சுவர் ஏறிக் குதித்து மாங்காய் திருடும் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், ஸாம்பியாவில் இது நடந்திருக்கிறது.

சஃபாரி பயணத்தை முடித்துவிட்டு, சுற்றுலாப் பயணி தனது அறையில் தங்கியிருந்த போது, தேசியப் பூங்காவுக்குள் இருந்த யானை ஒன்று சுவர் ஏறிக் குதித்து மாந்தோப்புக்குள் செல்லும் காட்சியை தனது கேமராவில் படம் பிடித்தார்.

சுவர் ஏறி குதித்து மாந்தோப்புக்குள் சென்ற யானைக்கு பெருத்த ஏமாற்றம், அந்த மாந்தோப்பில் இருந்த மரங்களில் ஒரு மாங்காயும் இல்லை. அது மாங்காய் சீஸன் இல்லை என்பது யானைக்குத் தெரியாமல் ஏமாந்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT