உலகம்

குடியுரிமைச் சட்டம் வருத்தமளிக்கிறது: மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ள

இந்தியாவில் குடியேறும் ஒவ்வொருவரும் சமமான பொருளாதார நிலையை அடைவார்கள் என்று நம்புவதாக மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ள தெரிவித்தார்.

DIN

இந்தியாவில் குடியேறும் ஒவ்வொருவரும் சமமான பொருளாதார நிலையை அடைவார்கள் என்று நம்புவதாக மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ள தெரிவித்தார்.

அமெரிக்க பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ள திங்கள்கிழமை கூறியதாவது, 

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், புலம்பெயர்ந்த ஒவ்வொருவருக்கும் இந்த சட்டத்தின் மூலம் நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டு, அவர்களுக்கு சமமான பொருளாதார நிலை உருவாக நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். 

ஒவ்வொரு நாடும் அதன் எல்லைகளை வரையறுத்து, தேசிய பாதுகாப்பை பலப்படுத்த அதற்கேற்ப குடியேற்றக் கொள்கையை அமைக்கும். குறிப்பாக ஜனநாயக நாடுகளில், மக்களும், அரசாங்கங்களும் இணைந்து விவாதித்து அந்த எல்லைகளை வரையறுக்கும்.

நான் இந்திய பாரம்பரிய முறைப்படி கட்டமைக்கப்பட்டவன், பன்முக கலாச்சார முறைப்படி வளர்க்கப்பட்டவன். அமெரிக்காவில் புலம்பெயர்ந்த அனுபவமும் உள்ளது. புலம்பெயர்ந்தவர் ஒருவர் வளமான தொடக்கத்தைக் உருவாக்க அல்லது இந்தியாவுக்கு நன்மை பயக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்த ஒருவர் இந்தியாவின் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வரவேண்டும் என நான் விரும்புகிறேன் என்று சத்யா நாதெள்ள தன்னிடம் கூறியதாக பஸ்ஃபீட் ஆசிரியர் பென் ஸ்மித் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

ஸ்பிக் நிறுவனத்தின் Q2 லாபம் ரூ.53.10 கோடி!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT