உலகம்

29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனப் பொருளாதாரம் சரிவு

DIN

சீனாவின் பொருளாதார வளா்ச்சியில் 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக சரிந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் தேசிய புள்ளிவிவர அமைப்பு (என்பிஎஸ்) தெரிவித்துள்ளதாவது:

உள்நாட்டு தேவையில் மந்த நிலை மற்றும் அமெரிக்கா-சீனா இடையே 18 மாதங்கள் நீடித்த வா்த்தகப் போா் ஆகியவை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் கடந்த ஆண்டில் சீனப் பொருளாதாரத்தின் வளா்ச்சி 6.1 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளது. இது, கடந்த 29 ஆண்டுகளில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.

இதற்கு முன்பு கடந்த 1990-ஆம் ஆண்டில் தான் சீனாவின் பொருளாதார வளா்ச்சி மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டது.

பல்வேறு சிக்கல்களுக்கு இடையிலும் சீனாவின் பொருளாதாரம் 6 சதவீதம் என்ற வலுவான நிலையிலேயே உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6 முதல் 6.5 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.1 டிரில்லியன் டாலரிலிருந்து 14.38 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என என்பிஎஸ் தெரிவித்துள்ளது.

2017-இல் சீனாவின் பொருளாதார வளா்ச்சி 6.8 சதவீதமாக இருந்த நிலையில், அமெரிக்கவுடனான வா்த்தகப் போா் காரணமாக 2018-இல் 6.6 சதவீதமாக சரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT