உலகம்

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முக்கிய நடவடிக்கைகள்

DIN

புதிய ரக கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சீனா முழுவதிலும் மக்கள் அரசின் ஏற்பாட்டில் ஒருமனதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி, பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த தரைப் போக்குவரத்து, விமான பயணியர் போக்குவரத்து மற்றும் இருப்புப்பாதை போக்குவரத்து வாரியங்கள் முன்னெச்சரிக்கைத் திட்டத்தை வகுத்து செயல்பட வேண்டும். தற்போது நாடளவில் 387 தொடர்வண்டி நிலையங்களில் பயணியர்களின் உடல் வெப்ப அளவீடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸால் நோய் தொற்றிக் கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் சிகிச்சை கட்டணம் பற்றி, அடிப்படை மருத்துவ காப்புறுதியைத் தவிரத்து தனிநபரால் செலுத்த வேண்டிய பகுதிக்கு நடுவண் அரசும் உள்ளூர் அரசும் உதவித் தொகை வழங்கும். நோய்யைக் கட்டுப்படுத்தி சமாளிக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கும் வேறு பணியாளர்களுக்கும் அரசு தற்காலிக மானியம் வழங்கும்.

25ஆம் நாள் இரவு வரை, நாடளவில் 30 மாநிலங்கள் முக்கிய பொது சுகாதார அவசரநிலைக்கான முதல் நிலை அமைப்புமுறையை துவக்கி, மிக கண்டிப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

ஷாங்காய், குவாங்துங், சிச்சுவான் மற்றும் ராணுவப் படையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உள்ளடங்கிய உதவிக் குழுக்கள் வூகானுக்குச் சென்று நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. 

வூகான் நகரில் கரோனா நோயாளிகளுக்குச் சகிச்சை அளிக்கும் வகையில், 1000 படுக்கைகளைக் கொண்ட ஒரு புதிய மருத்துவமனை கட்டியமைக்கப்பட்டு வருகின்றது. 2 வாரங்களுக்குப் பிறகு இது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தகவல், சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT