உலகம்

சாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவு

DIN

சிட்னி: சாலமன் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது. 

பசிபிக் நாட்டின் தலைநகரான ஹொனியாராவின் தென்கிழக்கிலிருந்து சுமார் 140 கி. மீட்டர் தொலைவிலும், 17.7 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. சுனாமி குறித்த எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த 2013-ல் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.0 ஆகப் பதிவானது. அதில், 10 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT