முகப்பு
உலகம்

சீனாவின் பயோ ஆய்வுக்கூடத்தில் கரோனா வைரஸ் உற்பத்தி: இஸ்ரேல் விஞ்ஞானி திடுக்கிடும் பேட்டி

சீனாவில் பயோ ஆய்வுக்கூடத்தின் மூலம் கரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக இஸ்ரேல் விஞ்ஞானி பேட்டியளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:38 PM
பகிர்:

சீனாவில் பயோ ஆய்வுக்கூடத்தின் மூலம் கரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக இஸ்ரேல் விஞ்ஞானி பேட்டியளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் குறித்து திடுக்கிடும் தகவல்களை இஸ்ரேலைச் ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் அதிகாரியும், உயிரியல் விஞ்ஞானியுமான டேனி ஷோஹம், தி வாஷிங்டன் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

உலக நாடுகளுக்குத் தெரியாமல் சீனா பயோ-ஆயுதம் தயாரிக்கும் ஆய்வுக்கூடங்களை வுஹானில் சீன அரசு உருவாக்கி நடத்தி வந்தது. மனிதர்களைக் கொல்லும் கிருமிகள் உருவாக்கப்படுவது குறித்து உலகநாடுகளுக்கு தெரியவந்ததும், அதுபோன்ற ஆய்வுக்கூடம் இல்லை என்று சீனா மறுத்தது. 

ஆனால் இந்த ஆய்வுக்கூடங்களில் இருந்து காரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். கடந்த வருடம் ஜூலையில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரையின்படி சீனாவின் வுஹான் நகரில் இதுபோன்று 4 பெரிய ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாக அறிந்தபோது இந்த தகவல்கள் கிடைத்தன.

இந்த ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் அல்லது பணியாளர்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு பரவியிருக்கலாம் அல்லது ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக பரவியிருக்கலாம். ஆனால், இதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தார்.

இஸ்ரேலைச் ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய லியுடினன்ட் கோலோனல் டேனி ஷோஹம், கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் உலகளவில் உயிரியல் தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →