கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த சீனா 4.4 பில்லியன் யுவான் நிதி ஒதுக்கீடு
சீனாவில் பெருகி வரும் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த 4.4 பில்லியன் யுவான் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சீனாவில் பெருகி வரும் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த 4.4 பில்லியன் யுவான் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மட்டும் 106 பேர் இதுவரை பலியாகினர், சுமார் 3 ஆயிரம் பேர் வரை நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சீன அரசு சார்பில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த 4.4 பில்லியன் யுவான் (640 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதுமட்டுமின்றி அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் மாகாணத்துக்கு கூடுதலாக 500 மில்லியன் யுவான் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.