உலகம்

கரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு அவசர நிலை அறிவிப்பு

DIN

கரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு உலகளாவிய அவசரநிலையை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மேலும் சீனாவுக்கான சர்வதேசப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த எந்தக் காரணமும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் நோய் தொற்று பாதிப்பு சீனாவை அடுத்து உலக நாடுகளிலும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவிலான சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அவசரநிலை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

இதனால், ஒவ்வொரு நாடும் தனது எல்லைகளை மூடுவது, விமானங்களை ரத்து செய்வது, விமான நிலையங்களுக்கு வரும் நபர்களைத் தீவிரமாக கண்காணிப்பது அல்லது பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானிக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT