முகப்பு
உலகம்

மியான்மர் மரகதப் பச்சைக்கல் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50 தொழிலாளர்கள் பலி

யங்கோன்: மியான்மர் மரகதப் பச்சை சுரங்கத்தில் நேரிட்ட நிலச்சரிவில் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Updated On : 2 ஜூலை, 2020 at 11:57 AM
மியான்மர் மரகதப் பச்சைக்கல் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50 தொழிலாளர்கள் பலி
பகிர்:

யங்கோன்: மியான்மர் மரகதப் பச்சை சுரங்கத்தில் நேரிட்ட நிலச்சரிவில் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மியான்மரின் கச்சின் மாநிலத்தில் ஹபாகந்த் நகர்பகுதியில் அமைந்துள்ளது மரகதப்பச்சைக்கல் வெட்டி எடுக்கப்படும் சுரங்கத்தில் இன்று காலை நிலச்சரிவு நேரிட்டதாக கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

மழைக் காரணமாக சுரங்கப் பகுதி முழுவதும் நீர் தேங்கியிருந்த நிலையில், மரகதப்பச்சை கல் சுரங்கத்தில் காலை 8 மணியளவில் மணல் சரிந்து விழுந்தது. ஈரமான நிலப்பரப்பு சுரங்கப் பகுதிக்குள் விழுந்ததால், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 50 தொழிலாளர்கள் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.