சொந்த ஊரில் தீ வைத்து எரிக்கப்பட்ட மெலானியா ட்ரம்ப்பின் சிலை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலானியாவின் மரத்தால் ஆன சிலையொன்று, அவரது சொந்த ஊரிலேயே தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஜுப்ளிஜானா: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலானியாவின் மரத்தால் ஆன சிலையொன்று, அவரது சொந்த ஊரிலேயே தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா. இவர் பழைய யூகோஸ்லோவியா நாட்டின் ஒரு பகுதியாக இருந்த ஸ்லோவேனியாவில் பிறந்தவர். அங்குள்ள செவ்னிகா என்ற நகரத்தில் பிறந்து வளர்ந்த அவர் ஒரு மாடலாக பணிபுரிந்தவர். அவர் ட்ரம்ப்பைத் திருமணம் செய்து கொண்ட பின்னர் அந்த நகரானது ஒரு சுற்றுலாத் தலமாக மாறியது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிராட் டவ்னி என்ற அமெரிக்கச் சிற்பி, செவ்னிகா நகரில் மரத்தைக் கடைந்து உருவாக்கப்பட்ட மெலானியாவின் சிலை ஒன்றை நிறுவினார். ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் அவர் அணிந்திருந்த நீலக் கலர் கோட் அணிந்திருப்பது போன்று அந்த சிலை அழகாக உருவாக்கப்பட்டிருந்தது.
Advertisement
இந்நிலையில் மெலானியாவின் குறிப்பிட்ட அந்த சிலையொன்று தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ஆம் தேதியன்று அந்த சிலைக்கு யாரோ தீ வைத்திருப்பதகவும், இதன்காரணமாக அந்த சிலை தற்போது அங்கிருந்து நீக்கப்பட்டிருப்பதாவும், அதனை நிறுவியவரான பிராட் டவ்னி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.