ரஷியாவில் மேலும் 6,248 பேருக்கு கரோனா: பாதிப்பு 7,39,947 ஆக அதிகரிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,248 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவித்துள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,248 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. முன்னதாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரேநாளில் 6,248 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 7,39,947 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதித்தோரில் நிறைய பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 175 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 11,614 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,804 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் இதுவரை 5,12,825 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.