தாகத்துக்கு தண்ணீர் கேட்கும் அணில்: வைரலாகும் விடியோ
தாகத்துக்கு தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணிலின் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
புது தில்லி: தாகத்துக்கு தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணிலின் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த விடியோவில் ஒரு இளம் ஜோடி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அணில், அவர்கள் கையில் வைத்திருக்கும் தண்ணீர் பாட்டிலைப் பார்த்தபடி தண்ணீர் வேண்டும் என்று கெஞ்சுகிறது. முன்னங்கால்களை உயர்த்தியபடி தண்ணீர் வேண்டும் என்று கையை அசைத்து, அந்த இளம் ஜோடிக்குப் பின்னாலேயே செல்கிறது.
அவர்கள் அணில் என்ன கேட்கிறது என்பதை புரிந்து கொண்டு தண்ணீர் புட்டியைத் திறந்து தண்ணீர் கொடுக்க முயற்சித்த போது, அந்த அணில் உடனே தண்ணீரை உறிஞ்சி குடிக்கிறது.
தண்ணீர் குடித்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியோடு துள்ளிக்குதித்து ஓடுகிறது. இந்த விடியோ சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.