உலகம்

கண்முன்னே பெற்றோரைக் கொன்ற தலிபான்களை சுட்டுக் கொன்ற ஆஃப்கன் சிறுமி

ENS

காஸ்னி: ஆஃப்கன் அரசுக்கு ஆதரவு அளித்த தனது பெற்றோரை சுட்டுக் கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை தனது கையால் சுட்டுக் கொன்ற சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சிறுமி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

கோர் மாகாணத்தின் மத்தியப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் கமர் கல் என்ற சிறுமியின் வீட்டில் இருந்த தனது பெற்றோரை, சாலைக்கு இழுத்துச் சென்று தன் கண் முன்னே தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதற்கு பழிக்குப் பழிவாங்கும் வகையில் இந்த சம்பவத்தை அப்பெண் நிகழ்த்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, சிறுமியின் தந்தை அந்த கிராமத்தின் தலைவர், ஆஃப்கான் அரசின் ஆதரவாளரும் கூட.

அவரைத் தேடி வந்த பயங்கரவாதிகள், வீட்டுக்குள் இருந்து சிறுமியின் தந்தையை இழுத்துச் சென்று கொல்ல முயன்றனர். அதனை தடுக்க முயன்ற அவரது மனைவியையும், அவரையும் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் நடந்த போது வீட்டுக்குள் இருந்த சிறுமி கமர் கல், தனது தந்தையின் ஏகே 47 ரக துப்பாக்கியை எடுத்து வந்து, தனது பெற்றோரைக் கொன்ற இரண்டு தலிபான் பயங்கரவாதிகளை நோக்கி சுட்டார்.  இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் இருந்த பயங்கரவாதிகளும் சிறுமி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கமர் கலுக்கு 14 - 16 வயது இருக்கலாம், ஆஃப்கனில் பொதுவாக பலருக்கும் சரியான வயது தெரிந்திருப்பதில்லை. 

இந்தச் சம்பவத்தை அடுத்து ஏராளமான தலிபான் பயங்கரவாதிகள் அப்பெண்ணின் வீட்டை தாக்கினர். அப்போது, அருகில் இருந்த கிராம மக்களும், பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தற்போது கமர் கல்லும், அவரது இளைய சகோதரரும் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிய நிலையில், பல தரப்பில் இருந்தும் கமர் கல்லுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT