முகப்பு
உலகம்

மனிதக் குலத்துக்கு நன்மை அளிக்கும் சீனாவின் செவ்வாய்க் கிரக ஆய்வு

2020ஆம் ஆண்டின் ஜூலை 23ஆம் நாளில், “தியான் வென் -1” எனும் சீனாவின் முதலாவது செவ்வாய் கிரக ஆய்வுக் கலம், விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது சீனாவின் செவ்வாய் கிரக ஆய்வு திட்டத்தின் முதல் அடியாக விளங்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

2020ஆம் ஆண்டின் ஜூலை 23ஆம் நாளில், “தியான் வென் -1” எனும் சீனாவின் முதலாவது செவ்வாய் கிரக ஆய்வுக் கலம், விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது சீனாவின் செவ்வாய் கிரக ஆய்வு திட்டத்தின் முதல் அடியாக விளங்குகிறது. 

ஒரே பயணத்தில் பல கடமைகளை நிறைவேற்றும் விதமாக சீனாவின் செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டம் செயலுக்கு வருகிறது. அதாவது, ஒரே ஒரு ஆய்வுக் கலத்தின் மூலம், செவ்வாய் சுற்றி வருதல், தரை இறங்குதல், தரையில் நடந்து ஆய்வு செய்தல் ஆகிய கடமைகள் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது, சீனாவின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் முன்னேற்றமாகும். இது சர்வதேச அளவில் இதற்கு முன்பு இது போன்ற ஒரு சாதனை நிகழ்த்தப்படவில்லை. 

செவ்வாய் கிரக ஆய்வு என்பது, செயற்கைக் கோள் செய்தித்தொடர்பு, புவியிடங்காட்டி, தொலை உணர்வறி போன்ற விண்வெளி தொழில் நுட்பப் பயன்பாட்டுத் திட்டப்பணிகளுடன் வேறுபாடுகள் உள்ளன. குறுகிய நேரத்தில், பொருளாதார பயன்கள் காணப்படவில்லை. மனிதக் குலத்திற்கான பொது நலன் சார்ந்த இலட்சியமாக இது கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில், அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, மனிதக் குலத்தின் மாபெரும் சாதனையாகும். தற்போது, உலகமயமாக்கத்தின் முன்னேற்றப் போக்கில், வளரும் நாடுகள் எழுச்சியை நனவாக்கும் பின்னணியில், இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட வளரும் நாடுகள், செவ்வாய் கிரக ஆய்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபடத் தொடங்கியுள்ளன. மனிதக் குலம், பேரண்டத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ளும் இலட்சியத்தில் இந்த நாடுகளின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.

தகவல்-சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →