நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 132 பேர் பலி
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த 40 நாள்களாக இடைவிடாமல் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மொத்தமுள்ள 77 மாவட்டங்களில் 70 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டதோடு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கை இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
மேலும் 128 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்ட அந்த ஆணையம் 53 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.