முகப்பு
உலகம்

அமெரிக்கா, சீனத் துணைத் தூதரகத்தை மூடக் கோரிக்கை விடுத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது: ரஷியா

ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரிய சக்கரோவா 23 ஆம் நாள் வழமையான செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரிய சக்கரோவா 23 ஆம் நாள் வழமையான செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது, அமெரிக்கா, ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத்தூதரகத்தை மூடச் சொல்லியிருப்பது குறித்துப் பேசிய அவர், அமெரிக்காவின் கோரிக்கை சட்ட ஒழுங்கிற்குப் புறம்பான ஒன்று என்று தெரிவித்தார். 

சட்ட வழிமுறையின் மூலம் சொந்த நாட்டின் நலனைப் பேணிக்காத்து, பொருளாதாரத்தை வளர்த்து வரும் ஒரு நாட்டின் மீது அமெரிக்க நீதி சட்ட கட்டுக்கோப்புக்கு உட்பட்டு, எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாவிட்டால், அந்நாட்டின் மீது எதிர்வினைத் தாக்குதலைத் தூண்டி விடுவது அமெரிக்காவின் இயல்பான அமைப்பு  முறையாகவுள்ளது எனக் குறிப்பிட்ட சக்கரோவா, அமெரிக்கா தன் நாட்டில் இருக்கும் தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரகங்களை மூடச் சொல்வது முதன்முறையல்ல என்றும் பலமுறை இது போன்ற சம்பவங்களைக் கண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், இச்செயலானது பல ஆண்டுகளாக சர்வதேசச் சமூகத்தில் அமெரிக்கா பிரச்சாரம் செய்துள்ள சட்ட அமலாக்கம் பற்றிய கருத்திற்குப் புறம்பானது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →