முகப்பு
உலகம்

ரஷியாவில் புதிதாக 5,871 பேருக்கு கரோனா: மேலும் 146 பேர் பலி

​ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,871 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
​ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,871 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,871 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியா கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய இன்றைய (சனிக்கிழமை) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 5,871 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,06,720 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 648 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 146 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 13,192 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 8,366 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,97,140 பேர் குணமடைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →