அமெரிக்காவில் புதிதாக 55,187 பேருக்கு தொற்று; பாதிப்பு 42 லட்சத்தைக் கடந்தது!
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 55,187 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 55,187 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. சமீபமாக இங்கு நாள் ஒன்றுக்கு 60,000 என்ற அளவில் பாதிப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 55,187 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 42 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி, மொத்தமாக 42,29,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 518 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழப்பு 1,46,909 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 20 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.