உலகம்

உலகில் 4-ஆம் இடம்: மெக்சிகோவில் கரோனா பலி 44 ஆயிரத்தைத் தாண்டியது!

DIN

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 342 பேர் பலியாகியுள்ளனர். 

மெக்சிகோவில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,973 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,95,489 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோன்று, மேலும் 342 பேர் பலியாகியுள்ளதையடுத்து, அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,022 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் 2.56 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில், முதல் மூன்று இடங்களில் முறையே அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் உள்ளதை அடுத்து, 4 ஆம் இடத்தில் மெக்சிகோ உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT