முகப்பு
உலகம்

அமெரிக்காவில் புதிதாக 57,039 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 679 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 57,039 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
கோப்புப்படம்
பகிர்:

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 57,039 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. சமீபமாக இங்கு நாள் ஒன்றுக்கு 60,000 என்ற அளவில் பாதிப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிதாக 57,039 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்தமாக 42,86,663 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 679 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழப்பு 1,47,588 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 21 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →