உலகம்

அமெரிக்காவின் முடிவுக்கு சர்வதேச சமூகம் விமர்சனம்

சொந்த நலன்களுக்காக சர்வதேச அமைப்புகளிலிருந்து விலக வேண்டும் என்பது கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவிந் செயல்பாடாக இருந்து வருகிறது.

DIN

சொந்த நலன்களுக்காக சர்வதேச அமைப்புகளிலிருந்து விலக வேண்டும் என்பது கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவிந் செயல்பாடாக இருந்து வருகிறது.

அமெரிக்கா முன்வைத்த சீர்திருத்தத்தை செயல்படுத்த உலக சுகாதார அமைப்பு மறுத்ததால், அதனுடனான உறவைத் துண்டிப்பதாகவும். இவ்வமைப்பிற்கான உறுப்பினர் கட்டணத்தை செலுத்தமாட்டோம் என்றும் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுக் காலத்தில், அமெரிக்க அரசுத் தலைவர் அறிவித்தார். இந்த ஒருசார்பான முடிவு குறித்து சர்வதேச சமூகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதிய ரக கரோனா வைரஸ் பரவல் தடுப்பில், ஒற்றுமை, ஒத்துழைப்பு ஆகியவை தலைசிறந்த ஆற்றலாகும். ஆனால், பங்குப்பத்திரம் மற்றும் வாக்குகள் முக்கியத்துவமாகும் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் கருதுகின்றனர். இது அறிவற்ற செயலாகும்.

உலக பொது சுகாதார பாதுகாப்பில் அதிகாரம் மற்றும் திறமை மிக்க சர்வதேச நிறுவனமாக இருந்து வரும் உலக சுகாதார அமைப்பு தொற்று நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுபாட்டில் பல்வேறு நாடுகளை ஒருங்கிணைத்து, ஈடிணையற்ற பங்கினை ஆற்றி வருகிறது. இதனை சர்வதேச சமூகம் உயர்வாக பாராட்டியுள்ளது.

தற்போது, அமெரிக்காவில் புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 18 லட்சத்தை நெருங்கியுள்ளது. இவர்களில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும் முடிவுக்கு உள் நாட்டிலேயே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முடிவு, அமெரிக்காவின் தொற்று நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு பணிகளுக்கு பெரும் பாதிப்பை மேலும் ஏற்படுத்தும் என்று அமெரிக்க மக்கள் கருதுகின்றனர். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT