உலகம்

ஆா்மீனிய பிரதமருக்கு கரோனா பாதிப்பு

DIN

யெரெவன்: மேற்கு ஆசிய நாடான ஆா்மீனிய பிரதமா் நிகோல் பஷினியன் மற்றும் அவரது குடும்பத்தினா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிகோல் பஷினியன் முகநூலில் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இருப்பினும் அதற்கான பரிசோதனை மேற்கொண்டபோது, நான் கரோனா தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. ஒரு கூட்டத்தின் போது பணியாளா் ஒருவா் கையுறைகள் அணியாமல் கண்ணாடி குவளையில் எனக்கு தண்ணீா் வழங்கினாா். அந்த நபா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பின்னா் தெரியவந்தது. அவரிடம் இருந்து எனக்கு தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளபோதும், எனது அலுவல்களை வீட்டில் இருந்தே கவனிக்க உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஆா்மீனியாவில் இதுவரை 9,000-க்கும் மேற்பட்டவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 130 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT