முகப்பு
உலகம்

மின்னியபொலிஸ் பாணி: முகக்கவசம் அணியாதவரின் கழுத்தை முட்டியால் அழுத்திய காவலர்

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் ஓயாத நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முகக்கவசம் அணியாதவரின் கழுத்தை முட்டியால் அழுத்திய காவலரைப் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படு

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:


அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் ஓயாத நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முகக்கவசம் அணியாதவரின் கழுத்தை முட்டியால் அழுத்திய காவலரைப் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மின்னெசொட்டா மாகாணம், மின்னியாபொலிஸ் நகரைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் ஃபிளாய்ட். கருப்பினத்தைச் சோ்ந்த அவா், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட போது அவரது கழுத்தில் காவலர் முட்டியை வைத்து அழுத்தியதில் அவர் மரணம் அடைந்தார்.

இதேபோன்று ஜோத்பூரின் ஜார்ஜ் ஃப்ளாய்ட் சம்பவத்தில், முகக்கவசம் அணியாமல் வந்த நபரை, காவலர் ஒருவர், கீழே தள்ளி, அவரது கழுத்தில் தனது முட்டியை வைத்து அழுத்துகிறார். 

ஆனால், கீழே விழுந்த வேகத்தில் துரிதமாக எழுந்த அந்த நபர், காவலருடன் மிக ஆக்ரோஷமாக சண்டையிடுகிறார். அங்கு மிகப்பெரிய வன்முறை வெடித்து, பெருங்கூட்டம் கூடிவிட்டது. காவலர்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்ட அந்த நபர் முகேஷ் குமார் பிரஜாபத் என்று தெரிய வந்துள்ளது.

அவருக்கு காவல்துறையினர் செல்லான் அனுப்பியிருக்கிறார்கள். காவலருடன் சண்டையிட்டு, சீருடையை கிழித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரஜாபத் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், ஏற்கனவே இதுபோன்ற சண்டையில் தந்தையின் கண்களையே பறித்தவர் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.