ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 171 பேர் பலி; மேலும் 8,595 பேருக்கு தொற்று
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,595 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,85,253 ஆக அதிகரித்துள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,595 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,85,253 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து, ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் வரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,595 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 4,85,253 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 171 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 6,142 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 2,42,397 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.