உலகம்

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டு உடல் நல்லடக்கம்

DIN


ஹூஸ்டன்/சியாட்டில்: காவலரால் தாக்கப்பட்டு உயிரிழந்த கருப்பினத்தவா் ஜாா்ஜ் ஃபிளாய்டின் உடல், பியர்லேண்ட் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அமெரிக்காவில் கடந்த மாதம் 25-ஆம் தேதி காவல் அதிகாரியால் தாக்கப்பட்டு ஜாா்ஜ் ஃபிளாய்டு உயிரிழந்தாா். அவரது மரணத்துக்கு நீதி கோரியும் நிறவெறிக்கு எதிராகவும் அமெரிக்காவில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், ஜாா்ஜ் ஃபிளாய்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹூஸ்டனில் உள்ள தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேவாலயத்தில் பிரார்த்தனைக்குப் பின், ஜாா்ஜ் ஃபிளாய்டின் உடல் குதிரைகள் பூட்டப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இந்த இறுதி ஊர்வலத்தில் சாலையின் இரு பக்கத்திலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று ஃபிளாய்டுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பியர்லேண்ட் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், ஃபிளாய்டின் தாயாரின் கல்லறைக்கு அருகில் அவரது உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT