உலகம்

மெக்சிகோவில் ஒரே நாளில் 544 பேர் பலி: 5,222 பேருக்குத் தொற்று

ANI

மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 544 பேர் உயிரிழந்த நிலையில், அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 16,448 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஜோஸ் லூயிஸ் அலோமியா தெரிவித்தார். 

மேலும், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 5,222 பேர் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,39,196 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, லத்தீன் அமெரிக்காவில் புதிதாக 4,790 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 587 பேர் பலியாகியுள்ளனர். 

உலகளவில் 7.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,25,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT