உலகம்

நேபாளம் அரசுக்கு எதிராக போராட்டம்

DIN

நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அந்த நாட்டு அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி, அந்த நாட்டில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நேபாளத்தில் 2-ஆவதாக ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கடந்த மாா்ச் மாதம் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து அந்த மாதத்திலேயே நாடு முழுவதும் முழுமையான பொதுமுடக்கத்தை நேபாள அரசு அமல்படுத்தியது. அதற்குப் பிறகும் அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வந்தது. சனிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 5,335 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; அவா்களில் 18 போ் பலிகியுள்ளனா்.

இந்த நிலையில், கரோனாவுக்கு எதிராக நேபாள அரசு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி, தலைநகா் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காத்மாண்டுவில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். இதுதொடா்பாக, 7 வெளிநாட்டினா் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT