உலகம்

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 4.56 லட்சத்தை எட்டியது!

DIN


உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 4.56 லட்சத்தை எட்டியுள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

உலகம் முழுவதும் கரோனாவால் 85,83,926 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,56,428 பேர் மரணம் அடைந்துள்ளனர். 45,32,580 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 22,63,651 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,20,688 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 9,83,359 பேரும், ரஷ்யாவில் 5,61,091 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் 3,81,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 12,604 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT