உலகம்

வேலை வாய்ப்புகள் மூலம் வறுமை ஒழிப்பு: சீனா அறிவிப்பு

DIN

புதுப்புது வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிப்பது என்ற அறிவிப்பை மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம், நிதி அமைச்சகம், அரசவையின் வறுமை ஒழிப்புப் பணியகம் ஆகியவை அண்மையில் வெளியிட்டன.

வறுமை நிலையில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் வெளியூர்களில் வேலை செய்வதற்கு உதவியளிக்க வேண்டும் என்றும், இவ்வாண்டு வெளியூர்களில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையை நிதானப்படுத்த வேண்டும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வறுமை நிலையில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினருக்கான வேலை வாய்ப்புத் தகவலின் தொகுப்பை வலுப்படுத்தி, வெளியூர்களுக்கு இந்த உழைப்பு ஆற்றல் அளவை விரிவுபடுத்த வேண்டும்.

மேலும், உற்பத்தி மற்றும் இயக்கத்தில் இன்னல்களைச் சந்திக்கும் தொழில் நிறுவனங்களுக்கு உதவி மற்றும் வழிகாட்டலை வழங்க வேண்டும். வேலை இழந்த வறுமையிலுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களைக் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT