மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈஃபிள் டவர் திறக்கப்பட்டது 
உலகம்

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈஃபிள் டவர் திறக்கப்பட்டது

உலகம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்த போது, பொது முடக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற ஈஃபிள் டவர் இன்று பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

IANS


பாரீஸ்: உலகம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்த போது, பொது முடக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற ஈஃபிள் டவர் இன்று பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்காக ஈஃபிள் டவர் திறக்கப்பட்டாலும், பாரீஸ் நகரம் அதன் இயல்பு நிலைக்கு இன்னமும் திரும்பவில்லை.

உலகப் போருக்குப் பிறகு, கரோனா வைரஸ் காரணமாகவே ஈஃபிள் டவர் இவ்வளவு நீண்ட காலம் மூடி வைக்கப்பட்டிருந்தது. 

இன்று முதல் ஈஃபிள் டவரைப் பார்வையிட குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. 11 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பார்வையாளர்களுக்கும் முகக்கவசம் கட்டாயம்.

ஜூலை 1 வரை மின்தூக்கிகள் செயல்படாது என்றும், பார்வையாளர்கள் படிகட்டுகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

SCROLL FOR NEXT