முகப்பு
உலகம்

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,719 பேருக்கு தொற்று; பாதிப்பு 6.41 லட்சமாக உயர்வு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,719 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,41,156 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
கோப்புப்படம்
பகிர்:

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,719 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,41,156 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து, ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு பாதிப்பு 8 ஆயிரம் என்று இருக்கும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. 

அதன்படி, ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,719 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 6,41,156 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 93 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 9,166 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,343 பேர் உள்பட தற்போது வரை 4,03,430 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 782 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்த பாதிப்பு 2,20,853 ஆக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.